search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிடி அகர்வால்"

    அகர்வால் மரணத்தை தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த கோரி மேலும் ஒரு சாமியார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #GopalDas #Ganga #GDAgarwal
    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், நீர் மின் நிலையங்கள் கட்டுவதால் நதியின் போக்குமாறுகிறது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான ஜி.டி. அகர்வால் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார்.

    அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சாமியார் தலைநகர் ரிஷிகேஷில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பெயர் கோபால்தாஸ்.

    36 வயதாகும் இவர் இளமையிலேயே துறவியானார். பிரபல சாமியார் அரவிந்த் ஹத்வாலின் சீடர் ஆவார்.

    கங்கையில் கால்வாய்கள், சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 24-ந்தேதி முதல் ரிஷிகேஷில் கங்கை நதிபாயும் பாக். மலைப்பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

    நேற்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாமியார் கோபால்தாசை ஆம்புலன்சில் ஏற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் முழு சிகிச்சை அளித்து வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக வலுக்கட்டாயமாக உணவு சாப்பிட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். #GopalDas #Ganga #GDAgarwal
    ×